Sunday, October 2, 2011

பெண்களின் இத்தனை வருடப் போராட்டங்களுக்குப் பிறகும்.....

பயணம்


எதையும் முழுதாக
விட்டுவிட முடிவதில்லை
கிழித்து எடுத்தாலும்
பிசிறலாய்
உறவுகள்

புதிர்


காலத்தின்
வெளிச்சுவர் தாண்டி
கிடக்கிறது எனது கயிறு


நுனி இறுகி
முடிச்சு வளையமாக
நீண்டு பரவும் மறுநுனிக்கையின்
விரைத்த பிடிப்புமாக

இன்னும் எனக்குத் தெரியாதது
அகப்படும் கால்களும்
விரைத்திழுக்கும் கைகளும்
எவருடையதென்பது.