Sunday, October 2, 2011

புதிர்


காலத்தின்
வெளிச்சுவர் தாண்டி
கிடக்கிறது எனது கயிறு


நுனி இறுகி
முடிச்சு வளையமாக
நீண்டு பரவும் மறுநுனிக்கையின்
விரைத்த பிடிப்புமாக

இன்னும் எனக்குத் தெரியாதது
அகப்படும் கால்களும்
விரைத்திழுக்கும் கைகளும்
எவருடையதென்பது.

1 comment:

  1. azhagana vaarthaigalil
    arumaiyaai irukkiradhu intha kavithai

    ReplyDelete