யாருக்காக
ஓடிக் கொண்டிருக்கிறது நதி
யாரை தேடியலைகிறது
மேகக்கூட்டம்
யாரை இலக்காக வைத்து
கடந்து செல்கிறது காற்று
யாருக்காக
பருவம் தப்பிப்
பெய்து கொண்டிருக்கிறது
இந்த இரவு மழை
யாரோடு
பேசிக்கொண்டிருக்கின்றன
வென்னிற அலைகள்
யாருக்காக
எதை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நாம்
நேற்று என்ன செய்தோம்
நாளை என்ன செய்யப்போகிறோம்
பதிலற்ற வாழ்விற்குள்
பதுங்கிக் கிடக்கிறது
பரபரப்பான
வாழ்க்கை
இலக்கற்ற
இலக்கே
No comments:
Post a Comment