Tuesday, August 31, 2010
மிச்சம்
Monday, August 30, 2010
யோசனை
இப்படித்தான்
ஆகுமென்று
யூகித்தது சரி
இப்படித்தான்
போகவேண்டும்
என்று
முடிவெடுத்ததும் சரி
இப்படியே
புறப்பட்டு வந்ததும் கூட
சரிதான்
ஆனால் இப்படியே
ஆனபிறகுதான்
எப்படிப் போவதென்று
யோசிக்க வேண்டியிருக்கிறது
Thursday, August 26, 2010
அட
யோசித்து முடித்து
இனி யோசிக்க
என்ன இருக்கிறது என
வேலையில் இறங்கும் போது
மீண்டும் வந்து
தொலைக்கிறது
தினமும்....
தினந்தோறும்
ஏதாவதொரு
அணியிடம் சிக்கிவிடுகிறது
ஒரு காலில் இருந்து
மறுகால் தள்ளி
மறுகாலில் இருந்து
உந்தப்பட்டு
உருண்டு திரிகிறது
தவறுதலான அணுகலில் ‘
இருந்து
தப்பித்து ஓடினாலும்
யாரேனும்
கைப்பற்றி விடுகின்றனர்.
மறுபடியும் மறுபடியுமாக
இப்படித்தான்
தினமும்
என்றாவது ஒருநாள்
எனக்கே எனக்கென்று
கிடைக்குமா
என் பொழுது
இப்படித்தான்
இப்படித்தான்
தளும்பிக்கொண்டு இருக்கும்
நிசியின் நிசப்தத்தில்
கசிந்து கொண்டிருக்கிறது மனது..
இருளின் ரகசிய வெளிச்சத்தில்
பக்கத்திலேயே வந்து நிற்கிறது
விடியலில் காத்திருக்கும்
பழகிப்போன சுமைகள்..
சாரலில் நனைந்தாலும்
சாலையில் இறங்கி நடக்க முடியாமல் தவிக்கும்
மழைக்கு ஒதுங்கியவனாய் நான்...
கடிகார முட்களை
பிடித்துக்கொண்டு
படுக்கையில் ஓடி
புரண்டு கொண்டிருக்கும்
வரிகளுக்கு தெரியுமா
இந்த தடுமாற்றம்..
அதிகாலை பனியில்
அறைக்குள் ஊடுருவும்
கூர்க்கா விசிலோடு
போர்வைக்குள் புதைந்தே போய் விட்டது
பாழாய் போன
இந்த கவிதை.