Tuesday, August 31, 2010

மிச்சம்



வழுக்கி வரும்
மழைக்காற்றில்
சிலிர்க்கும் -
ஈரம் பரவிய
பள்ளத்தாக்கு

உதடுகளில் உரசும்
முங்கில்
து
ளைகளில்
இருந்து
ஸ்வரங்கள் நிறைந்த
சங்கீதம்

பார்க்கும் போதே
சலசலவென
கரைபுரளும்
காட்டாறு....

வெட்க முகம் காட்டி
சதா கலந்து பிரியும்
மேகக்கூட்டம்...

காதுக்குள்
குடியேறும்
காதல் பறவைகளின்
கிசுகிசுப்புகள்....

தடங்கள் பதித்தபடி
எத்தனை எத்தனை
யுகங்கள் கடந்தாலும்
காட்டுக்குள் இன்னும்
மீதமிருக்கிறது

தொலைந்து போக
முடியாத
சுகானுபவங்கள்....

1 comment:

  1. சுகானுபவங்கள் சுகமான நினைவுகளை அள்ளி தெளித்து விட்டு செல்கிறது சாரலுடன் சேர்த்து...

    வார்த்தை பிரயோகங்கள் வசமிழக்கச் செய்கிறது..

    ReplyDelete