Thursday, August 26, 2010

இப்படித்தான்


இப்படித்தான்

தளும்பிக்கொண்டு இருக்கும்
நிசியின் நிசப்தத்தில்
கசிந்து கொண்டிருக்கிறது மனது..
இருளின் ரகசிய வெளிச்சத்தில்
பக்கத்திலேயே வந்து நிற்கிறது
விடியலில் காத்திருக்கும்
பழகிப்போன சுமைகள்..

சாரலில் நனைந்தாலும்
சாலையில் இறங்கி நடக்க முடியாமல் தவிக்கும்
மழைக்கு ஒதுங்கியவனாய் நான்...

கடிகார முட்களை
பிடித்துக்கொண்டு
படுக்கையில் ஓடி
புரண்டு கொண்டிருக்கும்
வரிகளுக்கு தெரியுமா
இந்த தடுமாற்றம்..

அதிகாலை பனியில்
அறைக்குள் ஊடுருவும்
கூர்க்கா விசிலோடு
போர்வைக்குள் புதைந்தே போய் விட்டது
பாழாய் போன
இந்த கவிதை.


No comments:

Post a Comment